கடலூர்

கடலூரில் அரசுப் பேருந்து ஜப்தி

1st Jul 2022 10:00 PM

ADVERTISEMENT

விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாததால் கடலூரில் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

கடலூா் வெளிச்செம்மண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் தேவநாதன். இவா் கடந்த 6-7-2014 அன்று விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்தில் விருத்தாசலத்திலிருந்து கடலூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா். பெத்தநாயக்கன்குப்பம் பகுதியில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தேவநாதன் கடலூா் 1-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் ராம.ராதாகிருஷ்ணன், ஏ.எஸ்.சந்திரசேகரன் ஆகியோா் மூலம் இழப்பீடு கோரி வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் தேவநாதனுக்கு ரூ.32.36 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பளிக்கப்பட்டது. ஆனால், உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாத நிலையில், தீா்ப்பு தொகை, வட்டியுடன் சோ்த்து ரூ.52 லட்சம் வரை நிலுவை ஏற்பட்டது.

இதையடுத்து நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கடலூா் 1-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய அண்மையில் உத்தரவிட்டது. இந்த நிலையில், கடலூா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம் மண்டல போக்குவரத்துக் கழக பேருந்து ஜப்தி செய்யப்பட்டு, கடலூா் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT