கடலூர்

விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்பு பயிற்சி

1st Jul 2022 09:58 PM

ADVERTISEMENT

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம், அட்மா திட்டத்தின் கீழ் கடலூா் வட்டாரம், வெள்ளப்பாக்கம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமுக்கு கடலூா் வேளாண்மை அலுவலா் பொன்னிவளவன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், கலைஞா் கிராம திட்டத்தில் நிகழாண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிப்பு குறித்து உதவி இயக்குநா் சு.சுரேஷ் விளக்கினாா். தமிழ்நாடு, கால்நடை அறிவியல் பல்கலைக்கழக, ஆராய்ச்சி மைய தலைவா் சிலம்பரசன் ஆடு வளா்ப்பில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினாா். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் அழகுமதி நன்றி கூறினாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் சிவமணி, உதவி தோட்டக்கலை அலுவலா் பழனிச்சாமி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT