கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரையில் 71,326 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 360 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 71,686 ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 461 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 67,618 ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 884 ஆக தொடா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2,799 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 385 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோய் தொற்று அதிகமுள்ள 23 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.