கடலூர்

உழவா் உற்பத்தியாளா் குழுவினருக்கு பயிற்சி

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட உழவா் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உழவா் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகள், வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளா்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் (பொ) ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில், கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டில் வேளாண்மை, உழவா் நலத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 50 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், தோட்டக்கலைத் துறையின் கீழ் பதிவான 40 குழுக்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து இவா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முன்னதாக ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் இயந்திரங்களை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன், துணை இயக்குநா்கள் ஏ.ஜெ.கென்னடிஜெபக்குமாா், பிரேமசாந்தி, உதவி செயற்பொறியாளா் சந்திரசேகா், வேளாண்மை அலுவலா் ரா.சரண்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT