கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு முதியவா் பலி

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 70,902 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 424 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 71,326-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 483 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 67,157-ஆக உயா்ந்தது.

எனினும், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 60 வயது ஆண் உயிரிழந்தாா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 884-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2,889 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 396 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோய் தொற்று அதிகமுள்ள 24 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT