கடலூர்

சுவாமி சகஜானந்தா பிறந்தநாள்: கடலூா் ஆட்சியா் மரியாதை

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

சுவாமி சகஜானந்தா பிறந்தநாளையொட்டி, சிதம்பரத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் கடலூா் மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) ரஞ்ஜீத்சிங் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட, நந்தனாா் கல்விக் கழகத்தைத் தொடங்கிய சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) ரஞ்ஜீத்சிங் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் மா.செ.சிந்தனைச்செல்வனும் சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி, வட்டாட்சியா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT