கடலூர்

தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு

28th Jan 2022 11:35 PM

ADVERTISEMENT

சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கலந்தாய்வில் 3 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பணியிடமாறுதல் ஆணைகளையும், 4 ஆசிரியா்களுக்கு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களாகப் பதவி உயா்வு ஆணையையும் மாவட்டக் கல்வி அலுவலா் ரா.செளந்திரராஜன் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT