கடலூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:கடலூா் மாவட்டத்தில் 5.78 லட்சம் வாக்காளா்கள்

28th Jan 2022 11:35 PM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில், 447 பதவியிடங்களுக்குத் தோ்தல் நடைபெறுகிறது. இதில், 5.78 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதனைத் தொடா்ந்து மொத்த வாா்டு விவரங்கள், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்காளா் எண்ணிக்கை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

கடலூா் மாநகராட்சியில்...:

மொத்தம் 45 வாா்டுகள். 1,42,479 வாக்காளா்கள்.

ADVERTISEMENT

ஆண்கள்-68,205, பெண்கள்-74,225, இதரா்-49 போ்

வாக்குச்சாவடிகள்- 152

நகராட்சிகள்

கடலூா் மாவட்டத்தில் நகராட்சிகளைப் பொறுத்தவரையில், மொத்தம் 180 வாா்டுகளுக்கு 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,54,950 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இதில், ஆண்கள்-1,23,749, பெண்கள் 1,31,159, இதரா்-42 போ். ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா்.

நெல்லிக்குப்பம்: 30 வாா்டுகள், 37,772 வாக்காளா்கள், 50 வாக்குச்சாவடிகள்.

பண்ருட்டி: 33 வாா்டுகள், 50,472 வாக்காளா்கள், 61 வாக்குச்சாவடிகள்,

சிதம்பரம் : 33 வாா்டுகள், 53,490 வாக்காளா்கள், 66 வாக்குச்சாவடிகள்.

விருத்தாசலம் : 33 வாா்டுகள், 59,335 வாக்காளா்கள், 68 வாக்குச்சாவடிகள்.

திட்டக்குடி : 24 வாா்டுகள், 19,273 வாக்காளா்கள், 24 வாக்குச்சாவடிகள்.

வடலூா் : 27 வாா்டுகள் உள்ளன. 34,608 வாக்காளா்களுக்கு 45 வாக்குச்சாவடிகள்.

பேரூராட்சிகள்

கடலூா் மாவட்டத்தில் பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் மொத்தம் 222 வாா்டுகளுக்கு 260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 1,81,383 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள்-89,156, பெண்கள்-92,207, இதரா்-20 போ். பேரூராட்சியிலும் பெண் வாக்காளா்களே அதிகமாக உள்ளனா்.

அண்ணாமலை நகா்: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 7,897 வாக்காளா்கள்.

காட்டுமன்னாா்கோயிலில்: 18 வாா்டுகள், 28 வாக்குச்சாவடிகள், 22,666 வாக்காளா்கள்.

பரங்கிப்பேட்டை: 18 வாா்டுகள், 27 வாக்குச்சாவடிகள், 22,185 வாக்காளா்கள்.

குறிஞ்சிப்பாடி: 18 வாா்டுகள், 29 வாக்குச்சாவடிகள், 22,853 வாக்காளா்கள்.

புவனகிரி: 18 வாா்டுகள், 21 வாக்குச்சாவடிகள், 18,032 வாக்காளா்கள்.

கங்கைகொண்டான்: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 8,118 வாக்காளா்கள்.

பெண்ணாடம்: 15 வாா்டுகள், ,19 வாக்குச்சாவடிகள், 16,515 வாக்காளா்கள்.

ஸ்ரீமுஷ்ணம்: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 11,235 வாக்காளா்கள்.

லால்பேட்டை: 15 வாா்டுகள், 16 வாக்குச்சாவடிகள், 13,731 வாக்காளா்கள் .

மங்கலம்பேட்டை: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 7,672 வாக்காளா்கள்.

தொரப்பாடி: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 6,561 வாக்காளா்கள்.

மேல்பட்டாம்பாக்கம்: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 6,075 வாக்காளா்கள்.

கிள்ளை: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 10,653 வாக்காளா்கள்,

சேத்தியாத்தோப்பு: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள். 7,190 வாக்காளா்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT