கடலூர்

திருநீலகண்டா் குருபூஜை விழா

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 சிதம்பரத்தில் திருநீலகண்டா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு திருநீலகண்டா் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் சங்கம், அனைத்து குலாலா் மக்கள் இயக்கம் சாா்பில் போல்நாராயணன் பிள்ளை தெருவில் உள்ள குலாலா் மடத்தில் நடைபெற்ற விழாவில், திருநீலகண்ட விநாயகருக்கு காலையில் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, திருநீலகண்டா் இளமைபெற்ற இளமையாக்கினாா் குளத்தில் சிவன்- பாா்வதி, திருநீலகண்டா்- ரத்தின சேலை ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இளமையாக்கினாா் கோயிலில் திருநீலகண்டா் ரத்தின-சேலைக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்று பேசினாா்.

முன்னதாக, குருபூஜை விழாவை அமைப்பின் கோவை மாவட்ட தலைவா் எம்.விஜயகுமாா் தொடக்கிவைத்தாா். பி.என்.குப்புசாமி, மாநிலத் தலைவா் சிவ.சந்தானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் ஏ.கே.ராஜா வரவேற்றாா். நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் காசி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினாா். கடலூா் மாவட்டச் செயலா் வி.வடிவேல், இளைஞா் அணி ஏ.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவையொட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ‘திருநீலகண்டா் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது. மகளிா் அணித் தலைவி கே.ரேவதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT