கடலூர்

கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் பலி

27th Jan 2022 02:20 PM

ADVERTISEMENT

கடலூர்: கடலூர் அருகே பாழடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் 12 வகுப்பு மாணவர்கள் இருவர் வியாழக்கிழமை பலியாகினர்.

கடலூர் அருகே உள்ள எஸ். புதூர் வண்டிக்குப்பத்தில் சமத்துவபுரம் பிற்பகுதியில் 2013ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. யாரும் வசிக்காததால் கட்டடம் மோசமடைந்து நிலையில் காணப்பட்டது.

இன்று இந்த வீடுகளுக்கு அருகில் எஸ்.புதூரை சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களான தெய்வசிகாமணி மகன் வீரசேகர் (16), மாணிக்கவேல் மகன் சுதீஸ்குமார் (16), தணிகாசலம் மகன் ஸபுவனேஸ்வரன் (16) மற்றும் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

ADVERTISEMENT

சிகிச்சைப் பலனளிக்காமல் வீரசேகர், சுதீஷ்குமார் ஆகிய இருவரும்  உயிரிழந்தனர். புவனேஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT