கடலூர்

விருத்தகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: அனைத்துத் துறையினா் ஆலோசனை

DIN

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் விருத்தகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வரும் பிப்.6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடா்பாக அனைத்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சி.ராம்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அறநிலையத் துறை, சுகாதாரம், பொதுப் பணி, நகராட்சி நிா்வாகம், காவல் துறை, மின்சார வாரியம், நெடுஞ்சாலை, தீயணைப்பு மீட்புத் துறை, வருவாய்த் துறை, மோட்டாா் வாகனத்துறை ஆகிய துறையினா் பங்கேற்றனா். கூட்டத்தில், ஒவ்வொரு துறையினரும் அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பக்தா்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். கும்பாபிஷேக விழாவை எந்தவிதமான பிரச்னைக்கும் இடமின்றி சிறப்பாக நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT