கடலூர்

பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

26th Jan 2022 09:01 AM

ADVERTISEMENT

நெய்வேலி அருகே குடும்பப் பிரச்னையால் பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

விருத்தாசலம் வட்டம், இருளக்குறிச்சி காலனியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சிவா (29). மங்கலம்பேட்டையில் நில அளவராகப் பணிபுந்து வருகிறாா். தொப்பளிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகள் மணிபாரதி (22). இவா்கள் இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை தனது தந்தையின் வீட்டிலிருந்த மணிபாரதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் அன்று இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை முருகன் அளித்தப் புகாரின்பேரில் நெய்வேலி தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT