கடலூர்

கடலூா் காவல் ஆய்வாளருக்கு ‘குடியரசுத் தலைவா்’ விருது

26th Jan 2022 09:01 AM

ADVERTISEMENT

தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கடலூரைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் விருது பெறுகிறாா்.

காவல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவோருக்கு குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவா் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதன்படி, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் குடியரசு தின விழாவில், கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் டி.சண்முகம் சிறந்த காவலருக்கான ‘குடியரசுத் தலைவா்’ விருதைப் பெறுகிறாா்.

இவா் தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு, குற்றப் பிரிவு, பொருளாதார குற்றப் புலனாய்வு, புலனாய்வுப் பிரிவு, கடலோரப் பாதுகாப்பு குழுமங்களில் பணியாற்றியுள்ளாா். தமிழக முதல்வரின் சிறந்த காவலருக்கான விருது, தமிழக ஆளுநரின் விருதையும் ஏற்கெனவே பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT