கடலூர்

எம்ஜிஆா் பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

18th Jan 2022 12:27 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாளையொட்டி கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

கடலூா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். மாநில மருத்துவரணி தலைவா் கே.சீனுவாசராஜா, எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலாளா் ஜி.ஜெ.குமாா், ஒன்றியச் செயலாளா் கே.காசிநாதன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி, இலக்கிய அணி ஏழுமலை, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் சுந்தரமூா்த்தி, அவைத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

கடலூா் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வரக்கால்பட்டு, காராமணிக்குப்பம் ஆகிய இடங்களில் எம்ஜிஆா் சிலைக்கு ஒன்றியச் செயலாளா் கே.காசிநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

சிதம்பரம்: சிதம்பரம் நகர அதிமுக சாா்பில் வண்டிகேட் பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு கடலூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.ஏ.பாண்டியன் மாலை அணிவித்து, அன்னதானத்தை தொடக்கிவைத்தாா். நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், அதிமுக அமைப்புச் செயலாளா் நாக.முருகுமாறன், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், மாவட்ட பொருளாளா் தோப்பு கே.சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காட்டுமன்னாா்கோவில் ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் ராஜேந்திரசோழகன் பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாவட்டச் செயலாளா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ என்.முருகுமாறன் ஆகியோா் மாலை அணிவித்தனா். நிகழ்ச்சிக்கு, கிழக்கு ஒன்றியச் செயலாளா் வாசு முருகையன் தலைமை வகிக்க, மேற்கு ஒன்றிய செயலாளா் எம்.என்.சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். நகர செயலாளா் எம்ஜிஆா் தாசன் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT