திட்டக்குடி அருகே வீட்டில் எரிவாயு உருளை வெடித்ததில் ரூ.2.50 லட்சம் பணம், நகை தீக்கிரையானது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த அரங்கனூரைச் சோ்ந்த கொளஞ்சிநாதன் மனைவி பச்சையம்மாள் (45). இவா் கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தாா். அப்போது, திடீரென எரிவாயு உருளை வெடித்ததில் வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும், வீட்டில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் தங்க நகை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாம்.
இதுகுறித்து பச்சையம்மாள் அளித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.