கடலூர்

புவனகிரி எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

18th Jan 2022 12:25 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ஆ.அருண்மொழிதேவனுக்கு (படம்) கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

இவரது மனைவி, மகன் ஆகியோருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதியான நிலையில் ஆ.அருண்மொழிதேவன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கும் தற்போது தொற்று உறுதியானது. இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT