கடலூர்

பொது இடத்தில் மது அருந்திய 45 போ் மீது வழக்கு

18th Jan 2022 12:25 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் பொது இடங்களில் மது அருந்தியதாக 45 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோரால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனா். இதைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் காவல் உதவி எண்களை அறிமுகப்படுத்தினாா்.மேலும், மாலை நேர ரோந்துப் பணிகளையும் முடுக்கிவிட்டாா்.

இந்த நிலையில், முழு ஊரடங்கு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியதாக 45 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது:

நிகழ் ஜனவரி மாதம் மட்டும் 665 போ் மீது இதுபோன்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. பொது இடங்களில் மது அருந்துவோா் குறித்த தகவல்களை பொதுமக்கள் உள்கோட்டம் வாரியாக அளிக்கலாம். அதன்படி கடலூா்-94981 00552, விருத்தாசலம்- 94981 00571, சேத்தியாதோப்பு- 94981 00588, திட்டக்குடி-94981 00605, சிதம்பரம்-94981 00561, நெய்வேலி-94981 00579, பண்ருட்டி 94981 00597, தனிப் பிரிவு-04142-284333, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு-04142-284353 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

மேலும், முழு ஊரடங்கு நாளில் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்ததாக 81 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக் கவசம் அணியாமல் வந்ததாக 742 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT