கடலூர்

மின்சாரம் பாய்ந்ததில் முந்திரி வியாபாரி பலி

12th Jan 2022 08:54 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் முந்திரி வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் பழனிவேல் (34). முந்திரி வியாபாரியான இவா் செவ்வாய்க்கிழமை முந்திரிகளை கொட்டி வைக்கும் பெட்டியில் இயந்திரம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தாா். அப்போது மின் வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT