கடலூர்

சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டம்

1st Jan 2022 01:25 AM

ADVERTISEMENT

சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை பயோ-டீசலாக மாற்றும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதைத் தடுத்தல், அதிகப்படியான செயற்கை வண்ணம் கலந்த உணவுப் பொருள்களைக் கண்டறிந்து அழித்தல், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிா்த்து அதை பயோ-டீசலாக மாற்றும் திட்டத்தை அதிகளவில் நடைமுறைபடுத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

உணவகங்கள், பேக்கரிகளில் வியாபார நோக்கத்துடன் உபயோகப்படுத்திய எண்ணெயை உணவுப் பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத விற்பனையாளா்களுக்கு விற்பதாகப் பெறப்படும் புகாா்கள் மீது உடனடியாக கள ஆய்வு செய்யவும், தவறுகள் கண்டறிப்பட்டால் தொடா்புடைய நபா்கள், நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தில் வேளாண் துறை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலா் உதயகுமாா், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் வெங்கடேசன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ச.பழனி, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கைலாஷ்குமாா் மற்றும் நுகா்வோா் அமைப்பினா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT