கடலூர்

ரேஷன் அரிசி கடத்தல்: இளைஞா் கைது

17th Feb 2022 11:40 PM

ADVERTISEMENT

புதுச்சேரிக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா் தோ்தல் பறக்கும் படையினருடன் இணைந்து புதன்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் 35 மூட்டைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதை புதுவைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

அந்த வாகனத்திலிருந்த 1,750 கிலோ அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சிதம்பரம் வட்டம், மணலூரைச் சோ்ந்த பரசுராமன் மகன் சதிஷ் (27) என்பவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT