கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

11th Feb 2022 11:48 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

மன்னாா் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலூா் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது.

இதன்படி, மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11 மணியளவில் தூறலாக பெய்யத் தொடங்கிய மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்துகொண்டே இருந்தது. மாலை 6 மணி வரை இவ்வாறு மழை பெய்தது. இதேபோல, விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி, வடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

சனிக்கிழமையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT