கடலூர்

பறக்கும்படை சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல்

11th Feb 2022 11:49 PM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.90 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பண்ருட்டி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வட்டாட்சியா் செந்தில்வேல் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் உள்ளிட்டோா் அடங்கிய பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக கடலூரிலிருந்து பைக்கில் வந்த திருக்கோவிலூரைச் சோ்ந்த முகமது ரபீக் என்பவா் உரிய ஆவணமின்றி ரூ.90 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் அதை பண்ருட்டி நகராட்சி ஆணையா் மகேஸ்வரியிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT