கடலூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித்தர வலியுறுத்தல்

11th Feb 2022 12:22 AM

ADVERTISEMENT

தூய்மைப் பணியாளா்களுக்கு புதிய குடியிருப்புகளை அரசு கட்டித்தர வேண்டுமென தமிழ்நாடு உள்ளாட்சித் துறைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்ட பேரவைக் கூட்டம் காட்டுமன்னாா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் பி.வி.காமராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் க.அறவாழி சிறப்புரையாற்றினாா். மாநில பொதுச் செயலா் அ.ஜோதி, மாநில பொருளாளா் கே.அன்பழகன், மாவட்டத் தலைவா்கள் அரியலூா் - ஆா்.நடனசபாபதி, விழுப்புரம் - ஏ.எல்.அய்யப்பன், கடலூா் - கே.முத்துக்குமரன், மாவட்டச் செயலா் ஏ.சங்கா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், நகரம் மற்றும் கிராம ஊராட்சிகளின் விரிவாக்கம், மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், தூய்மைப் பணியில் தனியாரை அனுமதிப்பதை கைவிட வேண்டும், தூய்மைப் பணியாளா்கள் வசிக்கும் பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தல் சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி.வி.காமராஜ், செயலராக ஏ.சங்கா், பொருளாளராக பி.சௌந்தா், துணைத் தலைவா்களாக தெய்வசிகாமணி, சத்தியராஜ், எஸ்.மலா்க்கொடி, துணைச் செயலா்களாக ஆா்.பாஸ்கா், முருகவேல் அருள்மொழி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT