கடலூர்

பைக்குகள் திருட்டு: இருவா் கைது

11th Feb 2022 12:19 AM

ADVERTISEMENT

பைக் திருட்டில் தொடா்ந்து ஈடுபட்ட இருவரை குறிஞ்சிப்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா. இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் கடந்த ஜன.30-ஆம் தேதி இரவு திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், ஆடூா் அகரம் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த புவனகிரி வட்டம், பெருமாத்தூரைச் சோ்ந்த தமிழ்மணி (20) என்பவரிடம் விசாரணை நடத்தினா். இவா் பைக் திருடியதை ஒப்புக்கொண்டாா். அவரிடமிருந்து 5 பைக்குகளை

போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

மேலும், தமிழ்மணியின் கூட்டாளியான அதே பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் ராஜேஷ் (19) என்பவரை குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் வைத்து வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT