கடலூர்

சிறாா்களுக்கான தடுப்பூசி முகாம்

10th Feb 2022 01:13 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில், 550 மாணவா்களுக்கு கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பொது சுகாதாரம், மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் கவிதா, செவிலியா் கனிமொழி உள்ளிட்டோா் செலுத்தினா்.

பள்ளித் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா், துணை முதல்வா் அறிவழகன், பள்ளி சுகாதாரச் செவிலியா் பி.சுகுணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT