கடலூர்

வாகனம் மோதியதில் மூதாட்டி பலி

2nd Feb 2022 08:50 AM

ADVERTISEMENT

நெய்வேலியில் வாகனம் மோதியதில் காயமடைந்த அடையாளம் தெரியாத மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடந்த ஜன. 25-ஆம் தேதி இரவு நெய்வேலி, கண்ணுதோப்பு பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி காயமடைந்தாா். இதையடுத்து, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அப்போது தனது பெயா் மூக்காயி என தெரிவித்தாராம். ஆனால், முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவில்லை.

இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. இவா் யாா் என அடையாளம் தெரியாத நிலையில் நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT