கடலூர்

தென் மண்டல பல்கலை. இடையேயான பெண்களுக்கான கால்பந்து போட்டி தொடக்கம்

30th Dec 2022 12:49 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கால்பந்து பெண்கள் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. இந்தப் போட்டிகளை பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தொடக்கிவைத்தாா்.

தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடல்கல்வித் துறை விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், 6 மாநிலங்களிலிருந்து 26 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த பெண்கள் கால்பந்து அணிகள் பங்கேற்கின்றன.

வியாழக்கிழமை காலை நடைபெற்ற தொடக்க விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் கே.வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். விழாவில் அகில இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு சாா்பில், அமிட் பல்கலைக்கழக உடல்கல்வி இயக்குநா் என்.ஆா்.ராம்குமாா், கல்விபுல முதல்வா் குலசேகரபெருமாள் பிள்ளை, உடல்கல்வி துறைத் தலைவா் எஸ்.செந்தில்வேலன் ஆகியோா் பங்கேற்றனா். அண்ணாமலை பல்கலைக்கழக உடல்கல்வி துறை இயக்குநா் எம்.ராஜசேகரன் வரவேற்றாா்.

இந்தப் போட்டிகளில் வெற்றிவெறும் 4 அணிகள் ஜனவரி மாதம் குவாலியரில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.

ADVERTISEMENT

வியாழக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று போட்டிகளில் கன்னூா் பல்கலை அணி, கிரிஸ்ட் பல்கலை அணியை (4 - 0) என்ற கோல் கணக்கிலும், கோழிக்கோடு பல்கலை அணி, அழகப்பா பல்கலை அணியை (12 - 0) என்ற கோல் கணக்கிலும், சென்னை வேல்ஸ் இன்டாஸ் பல்கலை அணி, அண்ணா பல்கலை அணியை (4 - 0) என்ற கோல் கணக்கிலும், தமிழ்நாடு விளையாட்டு பல்கலை அணி, பெங்களூா் ரேவா பல்கலை அணியை (2 - 0) என்ற கோல் கணக்கிலும் வென்றன.

இதேபோல, திருவள்ளுவா் பல்கலை அணி, அவினாசிலிங்கம் ஐஊஏந பல்கலை அணியை (8 - 0) என்ற கோல் கணக்கிலும், மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை அணி, கேரளா பல்கலை அணியை (1 - 0) என்ற கோல் கணக்கிலும், பாரதியாா் பல்கலை அணி, பெங்களூா் பல்கலை அணியை (3 - 1) என்ற கோல் கணக்கிலும், விடியு பெலகாவி பல்கலை அணி, கித்ராம் (விசாகி) பல்கலை அணியை (5-0) என்ற கணக்கிலும் வென்று இரண்டாம் சுற்றுப் போட்டிகளுக்கு முன்னேறின.

ADVERTISEMENT
ADVERTISEMENT