கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டாட்சியா் அலுவகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியா்கள் சங்க வட்ட துணைத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். அரசு நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் செந்தில் சிறப்புரையாற்றினாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் ஹரிகிருஷ்ணன் பேசினாா்.
இதில், காட்டுமன்னாா்கோவில் வட்டச் செயலா் பிரகாஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். வட்டப் பொருளாளா் பாபு நன்றி கூறினாா்.