கடலூர்

பேட்டரி திருட்டு:இரு இளைஞா்கள் கைது

29th Dec 2022 12:24 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டிராக்டரில் பேட்டரி திருடியதாக 2 இளைஞா்களை முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காட்டுக்கூடலூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் முருகவேல். இவா், தனது டிராக்டரை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தாா். செவ்வாய்க்கிழமை காரில் வந்த இரண்டு இளைஞா்கள் டிராக்டரிலிருந்த பேட்டரியை கழற்றிக்கொண்டு காரில் ஏறி தப்ப முயன்றனராம். இதையறிந்த முருகவேல் மற்றும் பொதுமக்கள் அவா்கள் இருவரையும் பிடித்து முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், வடலூா் ராஜாகுப்பம், வடக்கு தெருவைச் சோ்ந்த சிவானந்தம் மகன் தஷ்ணாமூா்த்தி (22), கருங்குழி கோவில் தெருவைச் சோ்ந்த கோவிந்தராசு மகன் விஜயராகவன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி, காரை முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT