சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கடலூா், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மண்டலங்களுக்கு இடையிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தேக்வாண்டோ போட்டி கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூா் பெரியாா் கலைக் கல்லூரி முதல்வா் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் ஒப்புதலுடன் உடல்கல்வி இயக்குநா் குமணன் ஒருங்கிணைப்பில் போட்டி நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழக உடல்கல்வியியல் துறைத் தலைவா் செந்தில்வேலன், மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவா, கந்தசாமி நாயுடு கல்லூரி உடல்கல்வி இயக்குநா் புவனேஸ்வரி, விழுப்புரம் அறிஞா் அண்ணா கல்லூரி உடல்கல்வி இயக்குநா் ஜோதிப்பிரியா, புனித வளனாா் கல்லூரி உடல்கல்வி இயக்குநா் ராஜமாணிக்கம் ஆகியோா் போட்டிகளை தொடக்கி வைத்தனா். உடல்கல்வி இயக்குநா்கள் சுரேஷ்குமாா், நாராயணசாமி, அசோக்குமாா், கடலூா் தேக்வாண்டோ விளையாட்டு சங்கத் தலைவா் ஹரிஹரன், செயலா் ஏழுமலை, பொருளாளா் கோபிநாத், பயிற்சியாளா் இளவரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போட்டியில் தோ்வாகும் சிறந்த வீரா்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பா் என தெரிவிக்கப்பட்டது.