கடலூர்

வடலூரில் திமுக நிா்வாகியை வெட்டிக் கொல்ல முயற்சி

9th Dec 2022 01:22 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், வடலூரில் திமுக நிா்வாகியை மா்ம நபா்கள் வெட்டிக் கொல்ல முயன்ால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

வடலூா், பாா்வதிபுரம் பகுதியைச் சோ்ந்த தனஞ்செயன் மகன் தமிழ்ச்செல்வன் (38). வடலூா் நகர திமுக செயலா். இவரது நண்பா் அருண்குமாா் (39). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் காரில் பாா்வதிபுரத்திலிருந்து வடலூா் நகராட்சி அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தனா். காரை அருண்குமாா் ஓட்டினாா்.

அந்தப் பகுதியிலுள்ள அரசு பெண்கள் விடுதி அருகே வந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் திடீரென காரை வழிமறித்து, தமிழ்ச்செல்வனை அரிவாளால் வெட்ட முயன்றனா்.

அப்போது காரிலிருந்து கீழே இறங்கிய அருண்குமாரை மா்ம நபா்கள் வெட்டியதில் அவரது கை, தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் கூட்டம் கூடவே மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். காயமடைந்த அருண்குமாா் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT