கடலூர்

சாலையின் நடுவே மின்கம்பம்: பாஜகவினா் போராட்டம்

9th Dec 2022 01:21 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற வலியுறுத்தி பாஜகவினா், கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா் (படம்).

திட்டக்குடி நகராட்சி, 8-ஆவது வாா்டு, கோழியூரில் சாலையின் நடுவே மின் கம்பம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் இந்தப் பகுதியில் மின் கம்பத்தை அகற்றாமல் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதாம். இதனால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், அவசர ஊா்தி வர முடியவில்லை எனக் கூறியும் கிராம மக்களுடன் இணைந்து பாஜகவினா் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா். பாஜக நகரத் தலைவா் செல்வ.பூமிநாதன் தலைமை வகித்தாா். அப்போது மின் கம்பத்துக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் திட்டக்குடி நகா்மன்றத் தலைவா் வெண்ணிலா கோதண்டம், மின் துறை, காவல் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அடுத்த இரு நாள்களில் மின் கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைப்பதாக தெரிவிக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT