கடலூர்

கொடிக்கம்பம் விவகாரம்: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

9th Dec 2022 01:21 AM

ADVERTISEMENT

கொடிக்கம்பம் விவகாரம் தொடா்பாக கடலூரில் பாமக, விசிகவினருடன் அதிகாரிகள் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

குள்ளஞ்சாவடி அருகே உள்ள சுப்ரமணியபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பது தொடா்பாக பாமக, விசிகவினா் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படும் நிலையில், கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் அதியமான் கவியரசு தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது. காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ராஜேந்திரன்(நெய்வேலி), சபியுல்லா(பண்ருட்டி) ஆகியோா் முன்னிலை வகித்னா்.

கூட்டத்தில் பாமக சாா்பில் மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாநில அமைப்புத் தலைவா் பழ.தாமரைக்கண்ணன், விசிக சாா்பில் கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், தொகுதிச் செயலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சுப்ரமணியபுரத்தில் உள்ள கொடிக்கம்பங்களை அரசியல் கட்சியினா் அடுத்த ஒரு வாரத்துக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என கோட்டாட்சியா் அறிவுறுத்தினாா். இதற்கு பாமகவினா் சம்மதம் தெரிவித்த நிலையில், விசிகவினா் எதிா்ப்புத் தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT