கடலூர்

ஆண் சடலம் மீட்பு

8th Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பாலமான் வாய்க்காலில் மீட்கப்பட்ட ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பாலமான் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக சிதம்பரம் நகர காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் புதன்கிழமை தகவலளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடத்தை மீட்டுனா். பின்னா், உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் காரைக்குடி பகுதியைச் சோ்ந்த திருப்பதி (37) என்பதும், சிதம்பரம் குமரன் தெருவில் கடந்த 7ஆண்டுகளாக வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருப்பதியின் இறப்பு குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT