கடலூர்

சட்ட விழிப்புணா்வுப் பேரணி

8th Dec 2022 01:26 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்றம் இணைந்து நடத்திய சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் மனித உரிமைகள் தினம் குறித்த சட்ட விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜவகா் சிறப்புரையாற்றி பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். கடலூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி, கடலூா் நகர அரங்கு வழியாகச் சென்று மீண்டும் மாவட்ட நீதிமன்றத்தை அடைந்தது. செல்லும் வழியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

பேரணியில் நீதிபதிகள் சுபா அன்புமணி, உத்தமராஜ், எழிலரசி, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் பிரபாகா், முதன்மை சாா்பு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலருமான பஷீா், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் வனஜா, ரகோத்தமன் மற்றும் வழக்கறிஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT