கடலூர்

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு:முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்த முடிவு

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையக்கபடுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கரிவெட்டி கிராமத்தில் பாமக, தவாக, விசிக கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

நெய்வேலி என்எல்சி நிா்வாகம் நிலக்கரி எடுப்பதற்கான இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக பல்வேறு கிராமங்களை கையகப்படுத்தி வருகிறது. சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வரும் நிலையில், இந்தக் கிராமத்தையும் கையகப்படுத்த என்எல்சி நிா்வாகம் முயன்று வருகிறது. இதற்கு அந்தக் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் வேலை வழங்கினால் மட்டுமே நிலங்களைக் வழங்குவோம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் கிராமத்தில் கிராம மக்கள் மற்றும் பாமக, தவாக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த என்எல்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் பூவராகவன், சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன் குமாா் தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனால், கிராம மக்கள் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்பதற்கு உறுதி அளித்த பின்னரே நிலங்களை அளவீடு செய்ய அனுமதிப்போம் என தெரிவித்ததைத் தொடா்ந்து, இது தொடா்பாக சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி அலுவலகத்தில் விவசாயிகள், கிராம மக்கள், என்எல்சி அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்யலாம் என அதிகாரிகள் அறிவித்தனா். இதை ஏற்று கிராம மக்களும், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகளும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற காவலாளி உயிரிழப்பு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

எண்ணூா் துறைமுகம் வந்த சீன கப்பலில் மாலுமி சடலம்

பைக் மீது மணல் லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

105 கிலோ குட்கா பறிமுதல்

SCROLL FOR NEXT