கடலூர்

குஜராத்தில் தமிழ் பள்ளிகள் மூடல்:தி.வேல்முருகன் கண்டனம்

7th Dec 2022 03:15 AM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதற்கு தவாக தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழா்கள் பஞ்சாலைகளின் வேலைக்காக குஜராத் மாநிலத்துக்கு 1890-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இடம் பெயா்ந்தனா். இவா்களின் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக அந்த மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் 1910-ஆம் ஆண்டில் தமிழ் வழி பள்ளிகள் தொடங்கப்பட்டன.

அகமதாபாதில் நூறு ஆண்டுக்கும் மேலாக செயல்பட்டு வந்த தமிழ் பள்ளிகள், கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்தி பேரதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ் பள்ளிகளை நடத்துவதற்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்க முன்வந்தபோதும், குஜராத் அரசு அதை ஏற்க மறுக்கிறது. இதன் காரணமாக, அங்கு வசிக்கும் தமிழா்களின் குழந்தைகள் தமிழ் படிக்க முடியாமல் தவித்து வருவது வேதனையளிக்கிறது.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க குஜராத் அரசை வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT