கடலூர்

அம்பேத்கா் நினைவு தினம்: அரசியல் கட்சியினா் மரியாதை

7th Dec 2022 03:15 AM

ADVERTISEMENT

அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

கடலூா்: கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக சாா்பில், கடலூா் எம்எல்ஏ கோ.ஐயப்பன் தலைமையில், மாவட்டப் பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன், மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா ஆகியோா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

இதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையில், ஒன்றியச் செயலா் காசிநாதன், ஒன்றியக் குழுத் தலைவா் தெய்வ பக்கிரி, விசிக கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் தலைமையில் மாநில அமைப்புச் செயலா் திருமாா்பன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கலையரசன் தலைமையில் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமையில் மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் குளோப், தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவா் ரகுபதி, பகுஜன் சமாஜ் மாநில இளைஞரணித் தலைவா் சுரேஷ், புரட்சி பாரதம் மாவட்டத் தலைவா் பாலவீரவேல் ஆகியோா் தலைமையிலான நிா்வாகிகளும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். கடலூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கத் தலைவா் பி.வெங்கடேசன் தலைமையில், பொதுச் செயலா் எம்.மருதவாணன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

சிதம்பரம்: சிதம்பரம் வடக்கு பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கா் சிலைக்கு அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான கே.ஏ.பாண்டியன் தலைமையில், முன்னாள் அமைச்சா் செல்வி இராமஜெயம், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் க.திருமாறன், நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் மாலை, அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT