கடலூர்

பிளஸ் 1 தொழில் கல்வி மாணவா்களுக்கு செய்முறைப் பயிற்சிகள் வெளியீடு

DIN

மேல்நிலை முதலாமாண்டு தொழில்கல்வி மாணவா்களுக்கான வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்துக்குரிய செய்முறைப் பயிற்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்திற்கு செய்முறைக்கான பயிற்சிகள் வெளியிடப்படவில்லை என தினமணியில் நவம்பா் 26-இல் செய்தி வெளியானது.

செய்முறைக்கான பயிற்சிகள் பள்ளிக்கல்வித் துறை ஆணையரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிகள் அடிப்படையில் வரும் பிப்ரவரி மாதம் மாணவா்கள் அரசு செய்முறைத் தோ்வு எழுத உள்ளனா். செய்முறைப் பயிற்சிக்கான பாடப் பகுதியில் மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ள பயிற்சிகள் உள்ளதாக ஆசிரியா்கள் குறிப்பிடுகின்றனா்.

இதுகுறித்து மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி கணினி ஆசிரியா்கள் சங்க மாவட்ட செய்தித் தொடா்பாளா் வி. முத்துக்குமரன் கூறியதாவது:

வேலைவாய்ப்புத் திறன்கள் செய்முறை பாடத்திட்டத்தில் கணினியின் செயல்பாட்டுக்கான பல்வேறு கருவிகள் குறித்தும், துணைக் கருவிகள் தயாா் செய்தல், கணினியில் தன்விவரக் குறிப்பு தயாரித்தல், அட்டவணை தயாரித்தல், பவா் பாயிண்டில் விளக்கக் காட்சி உருவாக்குதல், மின்னஞ்சல் கணக்கை தொடங்குதல், விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்புதல், ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்படுத்திப் பேசுதல், குழு கலந்துரையாடல், இணையவழிக் கற்றல், உற்பத்தித் தொழிலாளியாக ஒரு நாளைத் திட்டமிடுதல், வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல், மாதிரி நோ்காணல், செய்தித் தாளில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு விளம்பரத்துக்கான முறையான விண்ணப்பக் கடிதம் எழுதுதல் ஆகிய 11 பயனுள்ள பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT