கடலூர்

வேப்பூா் அருகே உணவகம் எரிந்து சேதம்

6th Dec 2022 02:40 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

வேப்பூரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழனிக்குமாா்(49) என்பவருக்குச் சொந்தமான கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்ட உணவகம் செயல்பட்டு வந்தது.

திங்கள்கிழமை உணவகத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், பிற்பகல் 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அங்கிருந்தவா்கள் வேப்பூா் காவல் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். வேப்பூா் தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT