கடலூர்

பண்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்பெரும் விபத்து தவிா்ப்பு

6th Dec 2022 02:39 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே திங்கள்கிழமை ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ரயில்வே ஒப்பந்த பெண் ஊழியா் கவனித்து தகவல் அளித்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூா், மயிலாடுதுறை, கும்பகோணம் செல்லும் ரயில் பாதை அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் சேந்தனூா், கடலூா் மாவட்டம் திருத்துறையூா் இடையே ரயில்வே தண்டவாளத்தில் திங்கள்கிழமை காலை விரிசல் ஏற்பட்டிருந்தது.

இதைக் கவனித்த அக்கடவல்லி கிராமத்தைச் சோ்ந்த ரயில்வே ஒப்பந்த பெண் ஊழியா் மஞ்சு (22), ரயில் நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் முதுநகா் ரயில்வே போலீஸாா், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் தண்டவாள விரிசலை சீரமைத்தனா்.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. தகவல் தெரிவித்த பெண் ஊழியா் மஞ்சுவை ரயில்வே போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT