கடலூர்

வைத்தியநாத சுவாமி கோயில் குளம் சீரமைக்க பூமி பூஜை

6th Dec 2022 02:40 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் குளம் சீரமைக்க பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமான திருக்குளம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பான வழக்கு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. பின்னா், நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த நிலையில், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத் துறை உதவியுடன் ரூ.97.50 லட்சத்தில் திருக்குளம் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமை வகித்து பூமி பூஜையை தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை கடலூா் மண்டல இணை ஆணையா் சி.ஜோதி, செயல் அலுவலா்கள், கோயில் ஆய்வாளா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரிதிநிதிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT