கடலூர்

4 டன் திருட்டு இரும்புடன் லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

5th Dec 2022 02:27 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் 4 டன் திருட்டு இரும்பை ஏற்றி வந்த லாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், லாரி ஓட்டுநரையும் கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரசன்னகுமாா் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள பழைய இரும்புக் கடையில் லாரியிருந்து பழைய இரும்பு பொருள்களை இறக்கிக் கொண்டிருந்தனா். அவா்கள் போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடினா்.

விசாரணையில், கடலூா் அருகே உள்ள இயங்காத எண்ணெய் நிறுவனத்திலிருந்து இரும்பு பொருள்களை திருடி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரி, 4 டன் இரும்பு ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், லாரி ஓட்டுநரான மேல்பட்டாம்பாக்கத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் ஜெகதீசனை (46) பிடித்து போலீஸாா் விசாரித்ததில், பண்ருட்டியை அடுத்துள்ள சேமக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் சிவமணி, கடலூரில் உள்ள தனியாா் நிறுவனத்திலிருந்து இரும்பு பொருள்களை திருடி வந்து குறிஞ்சிப்பாடியில் உள்ள ராஜாவின் பழைய இரும்புக் கடையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, ஜெததீசனை கைது செய்த போலீஸாா், தலைமறைவான சிவமணி, ராஜா ஆகியோரைத் தேடி வருகின்றனா். மேலும், ராஜாவின் பழைய இரும்புக் கடைக்கு போலீஸாா் ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT