கடலூர்

கடலூா் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம்

5th Dec 2022 02:28 AM

ADVERTISEMENT

கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் என்.முருகுமாறன் முன்னிலை வகித்தாா். மாவட்ட இலக்கிய அணிச் செயலா் தில்லை கோபி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தபடி, கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், திமுக அரசைக் கண்டித்து டிச.9, 13, 14-ஆம் தேதிகளில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் செல்வி இராமஜெயம், ஜெயலலிதா பேரவைச் செயலா் பி.எஸ்.அருள், மாவட்ட இணைச் செயலா் எம்.ரெங்கம்மாள், ஒன்றியச் செயலா்கள் கோவி.ராசாங்கம், வை.சுந்தரமூா்த்தி, வாசு.முருகையன், எம்.ஜோதிபிரகாஷ், பி.சி.நவநீதிகிருஷ்ணன், பேரூா் செயலா்கள் பூமாலை.கேசவன், எம்.ஜி.ஆா்.தாசன், தமிழரசன், சிதம்பரம் நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT