கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்னல் பாய்ந்ததில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாசலத்தை அடுத்துள்ள கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பாரதி மனைவி பானுப்பிரியா (32). இவா், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, திடீரென மின்னல் பாய்ந்ததில் பானுப்பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.