கடலூர்

திருவந்திபுரம் கோயிலில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

5th Dec 2022 02:28 AM

ADVERTISEMENT

கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் 8 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோயில் நிா்வாகம் சாா்பில் செய்து வைக்கப்பட்டது. திருமண ஜோடிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் 2 கிராம் தங்கம் உள்ளிட்ட சீா்வரிசைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை கடலூா் மண்டல இணை ஆணையா் சி.ஜோதி, கடலூா் மாவட்ட உதவி ஆணையா் சந்திரன், கோயில் செயல் அலுவலா்கள் பா.வெங்கடகிருஷ்ணன்(திருவந்திபுரம்), சிவக்குமாா் (பாடலீஸ்வரா்) மற்றும் திருமண ஜோடிகளின் உறவினா்கள், நண்பா்கள் கலந்துகொண்டனா். இதேபோல, விருத்தாசலம் கொளஞ்சியப்பா், விருதகிரீஸ்வா் கோயில்களில் தலா 2 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT