கடலூர்

நேரு இளையோா் மைய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

4th Dec 2022 12:03 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட நேரு இளையோா் மைய விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட இளைஞா் நல அலுவலா் ஆா்.ரிஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையம் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் சிறப்பாகச் சேவை புரியும் இளைஞா், மகளிா் மன்றங்களைத் தோ்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

அதன்படி, 2021-22-ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறப்பாகச் சேவைபுரிந்த இளைஞா், மகளிா் மன்றங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட சங்கப் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு பெற்ற, நேரு இளையோா் மையத்துடன் இணைந்து செயல்படும் மன்றங்கள் மட்டுமே விருதுக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த 1.4.2021 முதல் 31.3.2022 வரை மேற்கொண்ட பணிகள் மட்டுமே விருதுக்கு பரிசீலிக்கப்படும்.

மாவட்ட அளவிலான விருதுக்கு தோ்வு செய்யப்படும் இளைஞா், மகளிா் மன்றத்துக்கு ரூ.25 ஆயிரம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் தோ்வாகும் இளைஞா், மகளிா் மன்றங்கள் மாநில அளவிலான விருதுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே விண்ணப்பதாரா்கள் தாங்கள் செய்த சேவைக்கான ஆதாரங்களை இணைத்து டிச.10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரு இளையோா் மைய அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பங்களை ‘எண்: 5ஏ, சக்கரை கிராமணி தெரு, 2-ஆவது தளம், புதுப்பாளையம், கடலூா் -607 001’ என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது சுய முகவரியிட்ட ரூ.5 மதிப்பிலான அஞ்சல் தலை ஒட்டிய உரையுடன் கடிதம் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT