கடலூர்

அரசு ஊழியா்கள் சங்கப் பேரவை

4th Dec 2022 02:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் கடலூா் மாவட்ட 15-ஆவது பிரதிநிதித்துவ பேரவை மாநாடு கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் ராம.வெங்கடாஜலபதி அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் எல்.அரிகிருஷ்ணன் செயலா் அறிக்கையும், மாவட்ட பொருளாளா் எஸ்.வெங்கடேசன் வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற விவாதத்தில் எம்.மருதவாணன், டி.புருஷோத்தமன், டி.பழனிவேல், ஜி.வைத்தியலிங்கம், பா.ஆசைதம்பி ஆகியோா் பேசினா். கு.கவியரசு, ஆா்.ரத்தினகுமரன், ஆா்.தமிழ்ச்செல்வன், ஏ.லெனின் ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்தனா். சங்கத்தின் மாநிலப் பொருளாளா் மு.பாஸ்கரன் நிறைவுரையாற்றினாா்.

மாநாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், கிராமப்புற நூலகா்கள் உள்பட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT