கடலூர்

கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் மருந்தாளுநா்கள்

4th Dec 2022 12:01 AM

ADVERTISEMENT

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனா்.

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருந்தாளுநா்களுக்கு கரோனா ஊக்கத் தொகை வழங்க வேண்டும், காலியாக உள்ள தலைமை மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ஆம் தேதி முதல் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருந்தாளுநா்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் க.இளங்கோ தலைமையில் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் வருகிற 8-ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT