கடலூர்

புதுப்பிக்கவல்ல மின்னாற்றல் நிலையங்கள்: என்எல்சி இந்தியா புதிய ஒப்பந்தம்

DIN

புதுப்பிக்கவல்ல மின்னாற்றல் நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஒடிஸா மாநில அரசின் மின் தொகுப்பு நிறுவனத்துடன் என்எல்சி இந்தியா நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. தற்போது, நாட்டின் புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறைக்கான இலக்கை அடையும் வகையில் பல்வேறு பசுமை மின் சக்தி திட்டங்களைச் செயல்படுத்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் அடிப்படையில், ஒடிஸா மாநில அரசின் மின் தொகுப்பு நிறுவனத்துடன் இணைந்து நீா் நிலைகளில் மிதக்கும் சூரிய ஒளி மின் திட்டம், புனல் மின் திட்டம், பசுமை ஹைட்ரஜன் வாயு மூலம் மின்சக்தி தயாரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஒடிஸா மாநிலத் தலைநகா் புவனேசுவரத்தில் ‘ஒடிஸாவில் உற்பத்தி செய்வோம்’ என்ற மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வா் நவீன் பட்நாயக், என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் ராகேஷ்குமாா் ஆகியோரது முன்னிலையில், என்எல்சி திட்டம் - செயலாக்கத் துறை இயக்குநா் கே.மோகன் ரெட்டி, ஒடிஸா மின் தொகுப்பு நிறுவன மேலாண் இயக்குநா் திரிலோச்சன் பாண்டா ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

ஒடிஸா ஜாசுகுடா, சம்பல்பூா் மாவட்டங்களில் ஆண்டுக்கு 2 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கங்களை செயல்படுத்தி வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், அங்கு மணிக்கு 24 லட்சம் யூனிட் மின் சக்தி உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தை விரைவில் அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT